
இன்றைய இறைமொழி
புதன், 15 ஜூலை 2026
பொதுக்காலம் 15-ஆம் வாரம்
எசா 10:5-7, 13-16. மத் 11:25-27
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் புகழ்ச்சிப் பாடலை வாசிக்கிறோம்.
அன்னை கன்னி மரியா எலிசபெத்தின் இல்லத்தில் பாடியதுபோல, தம் சீடர்கள் முன்னிலையில் தம் தந்தையாகிய கடவுளைப் புகழ்கிறார் இயேசு.
இயேசுவின் சமகாலத்துச் சமயப் பெரியவர்கள் இயேசுவுடைய போதனையை ஏற்கத் தயாராக இல்லை. மேலும், அதை எதிர்க்கிறார்கள். அவருடைய வல்ல செயல்கள் தீய ஆவியின் தூண்டுதலால் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் பின்புலத்தில் இயேசு தந்தையை நோக்கி இறைவேண்டல் செய்கிறார்.
விண்ணரசு பற்றிய மறைபொருள் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்படுவது குறித்து இயேசு மகிழ்கிறார். குழந்தைகள் என்பவர்கள் கற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள், கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள், புதிதாக மாறுவதற்கான வாய்ப்பு பெற்றிருப்பவர்கள்.
மறைமுகமாக திருத்தூதர்களைப் பாராட்டுகிறார் இயேசு.
கடவுள் பற்றிய புரிதலுக்கு குழந்தை உள்ளமே தேவைப்படுகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: