இன்றைய இறைமொழி
சனி, 13 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 23-ஆம் வாரம், சனி
புனித யோவான் கிறிஸோஸ்தம், ஆயர் – நினைவு
1 திமொத்தேயு 1:15-17. லூக்கா 6:43-49
‘பாவிகளை மீட்கவே கிறிஸ்து இயேசு இவ்வுலகுக்கு வந்தார்’ என்று நம்பிக்கை அறிக்கை செய்கிறார் பவுல் (முதல் வாசகம்). கடவுளின் நீடித்த பொறுமையின் அடையாளம் என்று தன் வாழ்வைப் பார்க்கிறார் பவுல். கடவுளின் இரக்கத்தின் அளவை நாம் காணும்போதெல்லாம் கிறிஸ்து நம்மை மாற்றுமாறு அவரிடம் நம்மையே கையளிக்கிறோம்.
ஒருவர் அவருடைய வாழ்வில் தரும் கனிiயைக் கொண்டே அறியப்படுகிறார் எனக் கற்பிக்கிற இயேசு, நம் வாழ்வில் நற்கனிகள் தர நம்மை அழைக்கிறார்.
மேலும், வெறும் சொற்கள் அல்ல, மாறாக, செயல்களே நம் வாழ்வின் அடித்தளங்கள் என்பதும் இயேசுவின் பாடம்.
வெறுமனே கேட்பதில் அல்ல, மாறாக, வாழ்வதில்தான் கிறிஸ்தவ நம்பிக்கை கனி தருகிறது.
இன்றைய நாளில் நாம் புனித யோவான் கிறிஸோஸ்தமை நினைவுகூர்கிறோம். பொன்வாய் கொண்டவர் என அழைக்கப்படுகிற இவர் கான்ஸ்டான்டிநோபுள் பேராயராக இருந்தார். போதனையில் சிறந்தவராக இருந்ததோடு வறியவர்மேலும் இவர் இரக்கம் காட்டினார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: